வணக்கம் ஹெல்சின்கி!
எந்த நகரவாசியையும் மறக்காமல்!
ஹெல்சின்கியில் வசிப்பவர்களின் மற்றும் நகர்ப்பகுதிகளின் சமத்துவத்தை நோக்கி.
ஹெல்சின்கியில் உங்கள் வாழ்க்கை இப்பொழுது இருப்பதை விட சிறப்பாக இருக்க முடியுமா என்று நீங்கள் யோசித்த்ததுண்டா? இயற்கையை அணுகுவதில் எளிமை, நியாயமான விலையில் குடிவசதி, சிறப்பான அடிப்படை சேவைகள் மற்றும் உங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு பொழுதுபோக்குகள்?
அல்லது சிறப்பாக செயல்படும் பொது போக்குவரத்து, உயர்தரமான நகராட்சியின் பள்ளிகள், மேம்பட்ட பொது சுகாதார வசதிகள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சுமுகமான வாழ்க்கையை உறுதிப்படுத்த இரவு முழுவதும் இயங்கும் பனிஉழவுகள் மற்றும் இதர பல பொது சேவைகள் குறித்து உங்களுக்கு திருப்தியா?
நகரத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் யோசனைகளை செயல்படுத்த நீங்கள் காத்திருக்க முடியாவிட்டாலும், அல்லது எதிர்காலத்திலும் தற்போதைய சேவைகள் தொடர்வதை உறுதிப்படுத்த விரும்பினாலும், நமது பொது வீட்டை, நமது ஹெல்சின்கியை, நட்பும், சுவாரஸ்யமும் மற்றும் சமத்துவமும் நிறைந்த நகராக மாற்ற இயலும் எங்கள் முயற்சியைச் சேருங்கள்.
என் பெயர் அர்விந்த் ராமச்சந்திரன். இந்தியாவில் இருந்து குடியேறிய நான் ஹெல்சின்கியில் 6 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். கட்டிடக் கலை மற்றும் நகர்ப்புறத் திட்டமைப்பு வல்லுனரான நான், எனது தற்போதைய பணியிடத்தில் பணியாளர் பிரதிநிதியாகவும் பணியாற்றுகிறேன். வேலைக்கு வெளியே சமத்துவம் மற்றும் மனித உரிமை சார்ந்த இயக்கங்களிலும், நகரவாசிகளை ஒன்றுகூட்டும் நிகழ்வுகளை தொகுப்பதிலும் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஈடுபட்டு வருகிறேன்.
2021 நகராட்சி தேர்தலில் ஹெல்சின்கி தேர்தல் மாவட்டத்தில் இடதுசாரி கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். நகரங்கள் எனது ஆர்வம். பின்லாந்தின் தலைநகரமான நமது ஹெல்சின்கி நகரம் வடிவமைக்கப்படும், கட்டமைக்கப்படும் மற்றும் இயங்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஹெல்சின்கிவாசிகளின் மாறுபட்ட மற்றும் ஊக்கமுள்ள குழுவுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளேன்.
நகரவாசிகளின் மற்றும் நகர்ப்புறங்களின் இடையே நிலவும் சமத்துவமின்மையைக் குறைப்பதே இந்த முயற்சியின் முக்கிய குறிக்கோள். குழந்தைகள், இளைஞர்கள், ஒற்றை பெற்றோர், வேலையில்லாதவர்கள், பெரியவர்கள், இன, பாலினம் மற்றும் பாலியல் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், சர்வதேச பின்னணி உள்ளவர்கள் மற்றும் வீடற்றவர்கள் போன்ற அனைவருக்கும் சிறப்பாக இயங்கும் நகறினை அமைக்க ஒன்றுகூடுகிறோம்.
இந்த குறிக்கோளை அடைய நாம் கீழ்க்கண்டவற்றை செய்வோம்:
தாழ்த்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி நகரம் முழுவதும் அடிப்படை சேவைகளை மேம்படுத்துதல்
நகர்ப்புற வளர்ச்சியின் பாதகமான குறுகிய மற்றும் நீண்ட கால சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைத்தல்
வெவ்வேறு குழுமங்களைச் சார்ந்தவரிடையே நானும் நகரவாசி என்னும் உணர்வை ஊக்குவித்தல்
தனிப்பட்ட சூழ்நிலைகளின் அல்லது சமூதாயத்தின் காரணமாக ஓரங்கட்டப்படுதலை அனுபவிப்பவர்களுக்கு ஆதரவளித்தல்
இந்த பக்கங்களில் அனைவருக்கும் செயல்படும் நகரத்திற்கான நமது பார்வையினை கண்டுகளிக்கலாம். பின்லாந்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நகராட்சித் தேர்தல்கள் பற்றிய பொதுவான தகவல்களையும் நீங்கள் பெறலாம்.
நட்புமிகுந்த, சுவாரஸ்யமான மற்றும் சமூகநீதி நிறைந்த ஹெல்சிங்கியை நோக்கிய இந்த கூட்டுப் பயணத்திற்கு உங்களை வரவேற்பதில் ஆர்ந்த இன்பமடைகிறோம்!
கீழேயுள்ள பக்கங்கள் மூலம் பிரச்சாரத்தைப் பின்தொடரலாம், ஆதரிக்கலாம் மற்றும் பகிரலாம்:
https://www.arvindramachandran.com
https://www.facebook.com/arvindsome
https://www.instagram.com/arvindrchn
பிரச்சாரத்திற்கு நன்கொடை அளிக்க:
https://www.arvindramachandran.com/donate
முன்கூட்டியே நன்றி. உங்களுடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்!